About Us

நினைவு மலர்

நினைவு மலர் / கல்வெட்டு,  வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் நினைவாக அவர்கள் குடும்பத்தினர் வெளியிடடும்  ஞாபகார்த்த நூலாகும். இந்நூலில் இறந்தவர்களின் மூதாதையர்கள் மற்றும் சந்ததியினரது  வம்சாவளி தகவல்கள், அவர்களின் குடும்பத்தினரும் நண்பர்களும் நினைவுகூரும் தனிப்பட்ட வரலாறு, மற்றும் சமூககலாச்சார வாழ்வியற் கட்டுரைகளும் அடங்கும்.

மேலும் இந்த நினைவுமலர் பாரம்பரியம் ஆனது, நம் தமிழர் சமூககலாச்சார வாழ்வியற்பற்றிய தகவல்த்தொகுப்பு ஆவணப்படுத்தல் வழிமுறையாகவும் நாம் காணமுடிகிறது. ஆகவே இந்த நினைவுமலரை ஒரு தனிமனிதர் சார்ந்த நூலக பாராமல் ஒரு சமூகவரலாற்று ஆவணமாகவே நாம் கருதி, எமது இந்த கல்வெட்டு / நினைவுமலர் புத்தக கலாச்சாரத்தை மறக்காமலும் கைவிடாமலும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லவேண்டிய காட்டாயம் எமக்கு உண்டு என்பதில் எமக்கு எந்த ஐயமும் தேவையில்லை.

நமது இந்த தமிழர் நினைவுமலர் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் ஆவணப்படுத்தலின் ஓர் சிறு முயர்ச்சையே இந்த NinaivuMalar.Online  சமூகவலைத்தளமாகும். இங்கு நீங்கள் உங்களின் பாசத்துக்குரிய முன்னோர்களின் நினைவுமலரினை பதிவேற்றம் செய்துகொள்ளலாம், மேலும் உங்கள் உறவினர் நண்பர்கள் உலகின் எங்கிருந்தாலும் இந்நூலை வாசிக்கவோ பதிவிறக்கம் செய்வவோ முடியும்.

வாருங்கள் எம்முடன் கைகோர்த்து, நம் நினைவுமலர்பாரம்பரியத்தை வருங்கால தலைமுறைக்கு எடுத்துச்செல்ல உதவுங்கள்.

நன்றி

Team
NinaivuMalar.Online